(k) Annan's Days of Musical Nights






          “Annan was established in perfect equanimity. HE had always been a savior of poors.”says prof. Damodaran.He had the privilege of associating himself in the service of sri Andalpuram Swamigal even at the age of ten.

        He used to read newspaper for Swamigal regularly. Right from his childhood prof.Damodaran whole heartedly served Annan in HIS day to day activities. We could understand from this Blessed man, the ways of Annan’s living in HIS initial days of spiritual practices.Prof.Damodaran narrates here the charm of Musical Nights performed by the freestyle troupe of Annan in those days…





Musical Nights



 அண்ணன் ஒரு ஏழை பங்காளர்

       “அண்ணன் எல்லோரையும் சமமாக பாவித்தார்கள்,ஏழை பங்காளனாக என்றுமே இருந்தார்கள். அவரோடு ஆத்மதொடர்பு வைத்திருந்த எல்லோரும் மகிழ்ச்சியாய் இருக்கின்றோம்” என்கிறார் பேராசிரியர். திரு.தாமோதரன் அவர்கள்.இவர் தனது பத்து வயதிலேயே ஆண்டாள்புரம் சுவாமிகளுக்கு செய்தித்தாள் படித்துகாட்டியும் மேலும் தனது இளம் வயதிலேயே அண்ணனின் தினசரி வாழ்வில் உணர்வுடன் ஒன்றி பணிவிடை செய்தும் வாழ்ந்தவர். இரவில் அண்ணன் கல்யாண முறுங்கை இலை போட்ட அடை செய்து அனைவருக்கும் வழங்கி ,“தாமுவை எழுப்பி கொடு”என அன்புடன் அண்ணன் தன்னை தாயுள்ளத்தோடு கவனித்ததையும் விவரித்தார்கள்

.    அவருடனான உரையாடலின் ஒரு பகுதியை தற்போது கேட்போம்.அண்ணன் தனது ஆன்மீக வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் வாழ்ந்த விதங்கள், சிறுவர்களை வழிநடத்திய விதங்கள் போன்ற பல விஷயங்களை திரு.தாமோதரன் அவர்கள் மூலம் கேட்டு தெளிந்தோம்.தினமும் இரவில் நடக்கும் பாட்டுக்கச்சேரியையும் அதில் அன்பர்கள் அனைவரும் கண்ட மகிழ்ச்சியையும் திரு.தாமோதரன் அவர்கள் கூற இங்கு கேட்போம் நாம்.